மழைத்துளி

சாலையில் செல்லும் பொழுது சட்டென்று ஒரு மழைத்துளி இமை மீது விழுந்தால், சில்லென்று ஒரு சிலிர்ப்பு தோன்றுமே! அப்படி தோன்றிய சிந்தனைச் சிதறல்களை பதித்து வைக்கும் இடம் இது!

Sunday, April 08, 2007

சி-வா-ஜி சி-வா-ஜி சி-வா-ஜி

சி-வா-ஜி சி-வா-ஜி சி-வா-ஜி

மொத்த தமிழகமே கடந்த ஒரு வாரமாக ஒலி வடிவில் கேட்டு கொண்டிருக்கும் மந்திரச் சொல். பாடல்கள் அனைத்தும் பிராமாதம்.அட்டகாசம்.Top-notch.
தலைவர்-ARR கூட்டணி மீண்டும் சாதித்துள்ளது.
அதெல்லாம் சரி, பாடல்கள் வந்து ஒரு வாரம் என்ன பண்ணிட்டு இருந்தே? அப்டினு நீங்க கேக்குறது புரியுது.வேற ஒண்ணுமில்லை. ஒவ்வொரு பாட்லேயும் மாட்டிக்கிட்டு, முழுசா ரசித்து கேட்டுட்டு வெளியில் வர இவ்ளோ நாள் ஆச்சு.

பல்லேலக்கா:
தலைவர் intro song. SPB voice. கருத்துள்ள வரிகள். its an instant hit. நா.முத்துகுமார் intro song வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி கொண்டுள்ளார்.
அய்யனாரிடம் கத்தி வாங்கி தான் pencil சீவலாமே...
பக்கத்து வீட்டுக்கும் சேத்து சமைக்கிற அன்பு இங்கு வாழும்.

அதிரடிக்காரன்:
another master piece from ARR. அபூர்வமான combination. ஆம். ARR குரல் நம் தலைவருக்கு. listen to this piece from ARR voice -
த-ள-ப-தீ தீ தீ தீ. மழலை :) வாலி has done his job கனகச்சிதமாக.

சஹானா :
வைரமுத்து 'அட' போட வைத்துள்ள பாடல். melody and stand out piece. முதன்முறையாக Udit Narayan இவ்ளோ தெளிவாக பாடியுள்ளது மிக ஆறுதல். மிகமுக்கியமாக வைரமுத்து வரிகளுக்கு.
என் விண்வெளி தலைக்கு மேல் திறந்ததோ?

வாஜி வாஜி வாஜி :
இரண்டாவது பாடலையும் வைரமுத்து நன்றாக எழுதியுள்ளார்.
ஆம்பல் மற்றும் மௌவல். இவை என்ன? இது தான் இப்பொழுது பலரது தலையைக் குடையும் கேள்வி.
இது தான் வைரமுத்து பாடல் எழுதும்போது நமக்கு கிடைக்கும் extras.
ஆம்பல் -> இரவிலே பூத்து பகலிலே குவியும் ஒரு வகை அல்லி பூ.
மௌவல் -> ஒரு வகை காட்டு மல்லி. செந்நிறமாக இருக்கும்.
சிலப்பதிகாரம், பதிற்றுப்பத்து போன்ற இலக்கியங்களில் இவை பற்றி மேலும் அறியலாம். இதைப் பயன்படுத்தியுள்ள விதம் வைரமுத்துவால் மட்டுமே முடியும். this is what called as சொல்லாண்மை.

ஒரு கூடை sunlight:
பா.விஜய் தமிங்கலத்தில் கலக்கியுள்ள பாட்டு.
சிறுசுக்கு உன் style, இளசுக்கு உன் style, பெருசுக்கும் உன் style. :)

THE-BOSS theme song:
இத இத இத தான் எதிர்பார்த்து இவ்ளோ நாள் காத்து கிடந்தோம்.
நன்றி ரஹ்மான். தியேட்டரில் இந்த bit வரும்போது . . . சரி சரி wait பண்ணுவோம்.

ரஹ்மான் has set some high standards with this album.
அவருக்கே இதை தாண்டுவது கடினம்.

சி-வா-ஜி பாடல்கள் -> பொறுத்தார் பூமியாழ்வார்.
we waited and we got it.

இத படிக்க மறந்துடாதீங்க.

Tuesday, December 12, 2006

தலைவர் தயவால்...

சில சம்பவங்கள் ஏன் நடக்குது அப்படின்னு நடக்கிறப்போ புரியாது.
கொஞசம் late a தான் விளங்கும். புரிஞ்சப்புறம் கண்டிப்பா ஆச்சரியமா இருக்கும்.

அப்டிதான் நம்ம blog matter கூட.
என்னடா ஒரு break விழுந்துடிச்சே!
எவ்ளோ try பண்ணாலும் continue பண்ண முடியலியேனு ஒரு கவலை வேற.

இந்த பதிவின் மூலம் மறு-தொடங்குதல் (re-start) செய்வதில் அடியேனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி!
அப்டி இன்னா புச்சா சொல்ல போறேனு கேக்குறீங்களா?
படிங்க படிங்க. ஆனா படிக்கும்போது விசில் அடிக்க் கூடாது. தன்னடக்கம் தேவை.

December 12. அட.
அதே தாம்பா. அதே தான்.
பக்காவா கொண்டாடினோம்ல. முதல கொஞசம் ஓவரா போகுதோனு ஒரு சந்தேகம்.
ஆபீசில தலைவர் பிறந்த நாளா?
அதுவும் போஸ்டர் அடிச்சி, கேக் வெட்டி...
கொஞ்சம் யோசனையா தான் இருந்தது.

எங்கிருந்து தான் வருவாய்களோ? எப்படி தான் கண்டுபிடிப்பாய்களோ?
இந்த தடவையும் நம்மள இறக்கி விட்டுபுட்டாய்ங்க.

இருந்தாலும் தலைவர் பேர காப்பாத்திட்டோம்ல.
பட்டாசு கிளப்பியாச்சில்ல.

இதுக்கு முன்னாடி Germany la 2000ல் தலைவர் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினேன்.
அப்பால இப்போ தான். கேக் வாங்க போன இடத்தில (Nilgris) ஏற்கனவே நாலு பேரு தலைவர் பிறந்த நாள் கேக் வாங்கிட்டு போனதை பெருமையாக சொன்னாங்க. இரண்டு ஆர்டர் வேறு.
இருக்கோம்டா. project ku ஒரு ஆள் இருக்கோம்டா. தலைவர் பேர காப்பாத்த.

சில படங்கள் உங்கள் பார்வைக்கு.








வழக்கம் போல் நான் இருக்கும் படங்களை நீக்கி விட்டேன்.
ஓயாம இந்த மூஞ்சிய எவ்ளோ தடவ தான் பாப்பீங்க.

தலைவர் எவ்ளோ பெரிய ஆள் அப்டினு தெரிஞ்சவங்க, தெரியாதவங்க, புரிஞ்சவங்க, புரியாதவங்க இத படிக்க மறந்துடாதீங்க.

Monday, September 11, 2006

வாழிய வாழியவே !



ஒரே நாளில் சமீபத்தில் எனக்கு அதிகமாக அனுப்பப்பட்ட மின்னஞ்சல். (17 முறை)
பல நாட்களுக்கு பிறகு தமிழ்நாடே கொண்டாடிய ஒரு நிகழ்ச்சி.
9/11 பற்றி உலகே பேசிகொண்டு இருக்க, தமிழகம் அதையும் மறந்து வாழ்த்திய ஒரு function.
எடுக்கப்பட்ட சில மணித்துளிகளிலேயே உலகம் முழுதும் flash செய்யப்பட்ட புகைபடங்கள்.

(நன்றி:Sada - நன்றி: Saro)
தமிழ் திரையுலகமே பெருமை பட்டுகொண்ட ஒரு திருமணம்.

அட! அதேதான். நம்ம செல்லப்பிள்ளை சூர்யா, சமத்துப்பெண் ஜோ(திகா) திருமணம் தான்.

முதலில் சில தடங்கல்கள் வந்தாலும், அதை சமாளித்து, பெற்றோர் சம்மதம் பெற்று, இல்லறத்தில் இனிதே இணைந்துள்ள இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.


பூவெல்லாம் கேட்டு பார்த்து உயிரிலே கலந்தது இந்த காதல். மாயாவியாக வந்த பேரழகன் சூர்யாவை காக்க காக்க என சொல்லி சில்லென்று ஒரு காதல் தந்தார் ஜோதிகா.

உங்களில் பலரை போல நானும் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்த ஒரு திருமணம் இது.
ஒரே வருத்தம் ஜோ இனி சினிமாவில் நடிக்க மாட்டாராம்.

இருவரும் இல்லறம் சிறக்க வாழிய வாழியவே !

Sunday, August 27, 2006

வேட்டையாடு விளையாடு !


Another new movie on First Day !
நன்றி பெங்களூர்.
நம்ம ஊர்ல கொஞ்சம் கஷ்டம் தான் முதல் நாளில் படம் பார்ப்பது.
ஆனால் பெங்களூரில் அது சாத்தியம்.
அட போப்பா.அதே துட்ல நான் மூணு தபா, நாலு தபா நம்மூர்ல படம் பாத்துடுவேன்.
Correct தான். cost-of-living இங்கே ஒரு matter தான்.
சரி. விஷயத்துக்கு வருவோம்.

முதல் Frameல் அட போட வைக்கிறார் கௌதம். அது படம் முழுக்க அங்கங்கே பளிச்சிடுகிறது.
பல "intelligent-screenplay" விஷயங்கள். கூர்ந்து கவனித்தால் மட்டுமே விளங்கும்.
முக்கியமாக இறுதி பத்து நிமிடங்கள்.

பெரிய ஆறுதல், 40-வயது கமலின் (போலீஸ்) பிண்ணனியை வேறொரு (முதல்) fightல் முழுவதும் சொல்லிவிடுவது, in matter of couple of minutes. சபாஷ் கௌதம்.

ஆனால் படத்தில் அங்கங்கே காக்க காக்க நெடிகள்.
சில இடங்களில் அப்பட்டமாக. சில இடங்களில் அழுத்தமாக.
அடையார் bridge scene, வில்லனின் கத்தல் வசனங்கள், (சில) பாடல் காட்சிகளின் location,வில்லன் use செய்யும் வார்த்தைகள் (அப்படியே காக்க காக்க பாண்டியா). Sorry கௌதம்.

FBI-Hollywood rangeku படம் பண்ண நினைத்ததற்கே ஒரு பெரிய கைத்தட்டல்.
கமலின் முதல் காதல் சரவெடியென்றால், கமல்-Jho காதல் மெல்லிய தென்றல்.
ஒவ்வொரு பாடலும் தனியே நில்லாமல், கதையை வேகமாக நகர்த்த உதவியுள்ளன.

முக்கியமான இரு விஷயம், கீழே படிங்க.
பட்டைய கிளப்பிட்டீங்க Harris-Jeyaraj. பிண்ணனி இசை முண்ணனியில்.
பிரகாஷ்ராஜ் - அட்டகாசம். அந்த காட்டில் அவர் கதறுவது, கண் முன்னே ரொம்ப நேரம் நிற்கும். (அந்த காட்சியில், கமல் அடக்கி வாசிப்பது - only you can do that Kamal).

காக்க காக்க அளவுக்கு கண்டிப்பாக இல்லை.
(அது கௌதமிற்கே to-repeat its a tough-task)
கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். For the very thought of this story line.

வேட்டையாடு விளையாடு. காக்க காக்க - part-2 (பல இடங்களில்)
As Gautham himself accepted, next time approach Kamal with a better script.


Wednesday, August 16, 2006

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே

அப்பப்போ junk-emails நமக்கு சில ஆச்சரியமான செய்திகளை அள்ளி தந்திடும்.
Junks தானே, அப்புறம் படிக்கலாம் என ஒதுக்கி வைத்து, (shift) delete செய்வதுதான் பெரும்பாலும் வழக்கம். In fact, junks என்று ஒரு கோப்பு-தொகுப்பை (folder) நண்பன் ரவிசங்கருக்காக உருவாக்கி, மறக்காமல் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை clean செய்வது அடியேன் வழக்கம். (ஸாரி ரவி). ஆனால் நேற்று கிடைத்த இந்த மின்னஞ்சல், கண்டிப்பாக unique-in-its-own-way. பதிய பட வேண்டிய ஒன்று. மிகவும் அரிதான சில புகைபடங்கள்.
எனவே இங்கே upload செய்துவிட்டேன்.










Tuesday, August 15, 2006

ஆடுவோமே ! பள்ளு பாடுவோமே !

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் !
வாழ்க பாரத மணித்திருநாடு !

இந்தியன் என்பதில் பெருமை கொள்வோம் !

எந்தையும் தாயும் மகிழ்ந்துகுலாவி இருந்ததும் இந்நாடே

அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தது முடிந்ததும் இந்நாடே
அவர் சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து சிறந்ததும் இந்நாடே
இதை வந்தனை கூறி மனத்தில் இருத்தி என்வாயுற வாழ்த்தேனோ
இதை 'வந்தேமாதரம்' 'வந்தேமாதரம்' என்று வணங்கேனோ

-மகாகவி பாரதியார்

- நன்றி ஷாலினி.

Thursday, August 10, 2006

Grand மாஸ்டரும் - Software என்ஜினியர்களும்

தமிழ் தொலைகாட்சிகளில் சன் டிவிக்கு இணையாக ஒரு Channel இல்லையே என்ற குறையை சமீப காலமாக விஜய் டிவி தீர்த்து வருகிறது. பல புதுமையான நிகழ்ச்சிகள். அவற்றுள் ஒன்று Grand Master - யார் மனசுல யாரு. வழக்கமான நிகழ்ச்சிகளில் இருந்து சற்றே மாறுபட்டதொரு நிகழ்ச்சி. இதை தொகுத்து வழங்கும் காயத்ரி ஜெயராம் ஏற்கனவே பிரபலம். :-) இதை நடத்தும் ப்ரதீப் கேரளாவில் கலக்கியவர். சுருக்கமாக இதைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால், நம் மனதில் நினைத்துள்ள ஒரு பிரபலமானவரின் பெயரை 21 கேள்விகளில் இவர் கண்டுபிடித்து சொல்லி விடுவார். நாம் சொல்ல வேண்டிய பதில் 'ஆம்', 'இல்லை'. அவ்ளோ தான்.
சரி அதற்கு என்னப்பா இப்போ?.
சற்று கூர்ந்து கவனித்தால், ப்ரதீப் வெற்றி பெறுவதன் ரகசியம் புரியும்.
நம்மில் பெரும்பாலோனோர் இதற்கு பழக்கமானவர்கள்.
ப்ரதீப் இங்கே use பண்ணுவது - method of elimination technique.
தோடா. அப்டினா இன்னாது?
நமக்கு தேவையில்லாதவற்றை நீக்கினால், தேவையானது கிடைத்துவிடும். அது போல தான் இது. ஆனால் அதற்கு சிறந்த subject-matter மற்றும் நினைவுத்திறனும் வேண்டும்.
அட நாம நம்ம software programல debug பண்ணும்போது இப்படித்தானே பண்ணுவோம். இதான் mattera? இவ்ளோ நாள் தெரியாம போச்சே!
correct. நம்மில் பலர் இதற்கு பழக்கப்பட்டவர்கள். ஆனால் ப்ரதீப் இதை சற்றே வித்தியாசமாக அணுகியுள்ளார். அடுத்த முறை இந்த method மூலம் முயற்சி செய்யுங்கள். it will work.

இந்த துணுக்கை type அடிக்கும்போது தோன்றிய ஒரு மென்மொழி (thoughts from junk mails).
Bugs can neither be created nor be destroyed.
It can only be transformed from one program to another, if you are smart.
Newton மன்னிபாராக.

Sunday, July 23, 2006

என்ன தவம் செஞ்சுபுட்டோம்?

அப்பர், திருநாவுக்கரசர், வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சி., பாரதியார், கர்ணன், வீரபாகு, சிவபெருமான், இராஜராஜ சோழன் ...
இன்னும் சொல்லி கொண்டே போகலாம்.
கண்டிப்பாக நம்மில் ஒருவர் கூட இவர்களை நேரில் பார்த்ததில்லை.

ஆனால் மேலே உள்ள ஒருவராவது நம் மனதில் ஒரு பெயரை கொண்டு வந்திருப்பார்கள்.
சி-வா-ஜி.
செவாலியே, நடிகர் திலகம், சிம்மக்குரலோன், நடிப்பு பல்கலைகழகம்....இன்னும் பல பெயர்.

கண்டிப்பாக பல சரித்திர நிகழ்வுகளை நாம் 'பார்த்து' தெரிந்து கொள்ள, பல விடுதலைப்போராட்ட வீரர்களின் இன்னல்களை அறிந்து கொள்ள, பல மாமேதைகளின் வாழ்வை புரிந்து கொள்ள உதவியது நடிகர் திலகத்தின் நடிப்பு தான்.

அவருடைய ஆரம்ப கால படங்கள் நமக்கு ஊட்டிய தமிழ் அறிவு மிக அதிகம்.

இவருக்கு அண்மையில் சிலை திறந்து பெருமை தேடி கொண்டார் தமிழக முதல்வர், கலைஞர்.
இருவரின் கலையுலக முன்னேற்றமும் மற்றவரால் மேலும் மகுடம் சூடிக்கொண்டது.

இந்த சிலைத்திறப்பு சில தடங்கலுக்கு பின்பே நடந்தது.
நம்மை விட தமிழார்வம் கொண்ட சில 'நல்லவர்கள்' என்ன செய்து விட்டார் இந்த சிவாஜி தமிழுக்கு என்று கேள்வி கேட்டு, சிலைக்கு தடை விதிக்க முயற்சி செய்து, மீசை மீது மண் ஒட்டி கொண்டனர்.

இறுதிவரை துணை நின்று, இந்த சரித்திர நிகழ்வை நடத்தி நட்புக்கு மேலும் ஓர் அளவுகோல் வைத்த கலைஞருக்கும், நடிப்பால் நடிப்பிற்கே பெருமை சேர்த்த சிவாஜிக்கும் ஒரு பெரிய salute.

இருவரை பற்றியும் பெருமை பேசமளவுக்கு இன்னும் எனக்கு அருகதை வரவில்லை.
தகுதியும் இல்லை. வந்தவுடன் கண்டிப்பாக இதே தளத்தில் வந்து எனது எண்ணங்களைப் பதிகிறேன்.

பின்னே இங்கே என்ன செய்கிறாய் ? என்று 'அன்பாக' கேட்பது புரிகிறது.
இவர்கள் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்கின்றோமே என்ற ஒரு சிறு 'தமிழ் கர்வம்' மற்றும் ஒரு சின்ன 'feelings-of-தமிழ்நாடு' இரண்டும் தான் காரணம்.

என்ன தவம் செஞ்சுபுட்டோம்?

சரியா? தவறா?

என்னடா நாம கூட ஏதோ தமிழ்ல ஆர்வமா கிறுக்க ஆரம்பிச்சிட்டோமே !
பிரச்சனை இல்லாம ஓடிட்டு இருக்கேனு பார்த்தேன்.
வந்துச்சு ஆப்பு !

சமீபத்தில் மும்பையில் நடந்த அக்கிரமத்திற்கு பிறகு ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிகமாக blogs தடை செய்யப்பட்டன (இங்கே படிங்க).
சரி நம்ம ராசி எல்லோருக்கும் சேர்த்து work-out ஆகுது போல, மத்த வேலையப் பாக்கலாம்னு போனா, உள்ளுக்குள்ளே தமிழார்வம் ஊற்றெடுத்து ஓடிட்டே இருந்திச்சு !

ஒரு வழியா தடை நீங்க, இதோ மீண்டு(ம்) வந்தேன் அடியேன்.

இந்த தடை கண்டிப்பாக நம்மை சற்றே அழுந்த சிந்திக்க வைத்துள்ளது !
மனிதனின் ஒவ்வொரு முன்னேற்றமும், கண்டுபிடிப்பும் முதலில் நன்மையை விட தீமையையே அதிகம் தந்துள்ளது !

இந்த தொழில் நுட்ப யுகத்தில், இணையமும் அதன் பன்முக (multi-faceted) பயன்பாடுகளும் தீய சக்திகளால் மிகவும் தெளிவாக உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆனால் இதைத் தடுக்க தீர்வு இது போன்ற தடைகள் அல்ல !
தனிமனித ஒழுக்கம் மிக முக்கியம்.

இதை இதற்கு தான் பயன்படுத்த வேண்டும் என்ற இலக்கணம் கண்டிப்பாக இங்கே வேண்டும்.
ஏதோ ஒரு சிறிய, காழ்ப்புணர்ச்சி கொண்ட, சில முட்டாள்களால் இது போன்ற ஒரு நல்ல கருத்து-பரிமாறும் சாதனம் வீணாக போகக்கூடாது என்பதே என் (பிடி)வாதம்.

நம்மை விட வரப்போகும் சந்ததிகள் இந்த ஆக்க உணர்வோடு இருப்பது மனித குல மேம்பாட்டிற்கு மிகவும் அவசியம் !
அது மெய்ப்பட நாம் அனைவரும் நேரடியாகவோ மறைமுகமாகவோ கண்டிப்பாக போராட வேண்டும்.

இதற்கு கொடி பிடிக்க சொல்லவில்லை இந்த குமரன்.
நம்து வீட்டில், அக்கம் பக்கத்தில் உள்ள குழந்தைகளை இந்த தீய-வழி-இணைய-பயன்பாடு என்ற அரக்கனிடமிருந்து காத்தாலே போதும்!

இதை நாம் செய்வோமா ?
கண்டிப்பாக செய்வோம் !
ஏனென்றால் அந்த படிதத முட்டாள் மிருகங்களுக்கும், நமக்கும் வேறுபாடு உண்டன்றோ.

Tuesday, July 11, 2006

நெஞ்சு பொறுக்குதில்லையே !

மற்றுமொரு குண்டுவெடிப்பு ! (முழு விவரம் இங்கே)
மேலும் சில உயிரழப்பு !
நேற்று வரை நம்மிடையே இருந்த சில சகோதர சகோதரிகள் இன்று நம்மிடையே இல்லை.எவ்வளவு கனவுகளோடு உழைக்க சென்றவர்கள் வீடு திரும்பவில்லை.


ஏன் இப்படி ? இவ்வளவு உயிர்கள் குடித்து என்னங்கடா சாதிக்க போறீங்க?எதற்கும் உதவாத, ஒரு இத்து போன, கொள்(ல்)கைக்கா இவை எல்லாம்?
இது சுத்தப் பேடித்தனம். தைரியம் துளியும் இல்லா கோழைத்தனம்.

இனி என்ன?
ஆளுங்கட்சி இந்த பாதகர்கள் யார் என ஆராயும்.
எதிர்கட்சி போராட்டம் நடத்தி, ஆளுங்கட்சியைக் குறை சொல்லும்.
ஒரு நாள் strike செய்து மேலும் பொதுமக்களை இம்சித்து, அரசியல் நடக்கும்.
ஒரு commission அமைக்க பெற்று தீவிரவாதிகள் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஓர் அறிவிப்பு வரும்.
ஏதோ ஒரு Director இது பற்றி ஒரு திரைப்படம் எடுப்பார்.
Cnnibn, NDTV தொலைகாட்சிகள் 2-3 நாட்கள் இதைப் பற்றி coverage செய்வார்கள்.
பத்திரிகைகள் இதை தலைப்பு செய்தியாக போடுவார்கள்.
tea kadai bench ல் ஒரு Group Discussion நடைபெறும்.
சில software engineers coffee time போது இது பற்றி பேசுவோம்.
மேலும் சிலர் இதைப் பற்றி ஒரு blog ல் தட்டச்சு செய்வோம்.

வேறென்ன செய்ய முடியும் நம்மால்?

நெஞ்சு பொறுக்குதில்லையே ! கண்ணம்மா !
இந்த நிலைக்கெட்ட உலகத்தைக் காணும் போதிலே !
இது போன்ற தீவிரவாதம் வெடிக்கும் போதிலே !
சக மனிதன் துன்புற, அதைத் பார்த்து இயலாமையால் துடிக்கும்போதிலே !
நெஞ்சு பொறுக்குதில்லையே ! கண்ணம்மா !


பின்குறிப்பு:
அவசர சேவைக்கு தொலைபேசி எண்களை flash செய்து உதவிய cnnibn & ndtv, தம்முயிர் பற்றி கவலைப் படாமல், சகபயணிகளைக் காப்பாற்றியப் மற்ற பயணிகள், coverage செய்ய வந்து வேலையை மறந்து அடிப்பட்டோரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற reporters,
அங்கே அபாயம் இருந்தும் உதவிய மனிதர்கள்,
இவர்கள் சொன்னார்கள். மனிதநேயம் இன்னும் இருக்கிறதடா என்று.


Thursday, July 06, 2006

பைக் மீது ஒரு பட்டாம்பூச்சி !

நாம் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் சட்டென்று நடக்கும் சில நிகழ்ச்சிகள் நம் மனதில் நிறைந்து நீங்காமல் நிலைத்துவிடும் !

யோசித்து பார்த்தால், நாம் அந்த இடத்தில், அந்த நேரத்தில் மிகச் சரியாக இருந்தது ஒரு புதிராக, ஒரு புரியாத அதிசயமாகவே தோன்றும் !

அப்படித்தான் சில தினங்களுக்கு முன்பு ஒரு இனிய நிகழ்வு !
இன்ப அதிர்ச்சி ! Sweet Surprise !

வழக்கம் போல், வேலை முடித்து, சிறிது களைப்போடு, parkingல் இருந்த எனது பைக் தேடி சென்றேன் !

காதில் வழக்கம் போல் காதொலிப்பான் (earphone) ஊஞ்சலாட, அதில் 'மின்சாரம் என் மீது பாய்கிறதே' பாய்ந்து கொண்டிருந்தது Run திரைப்படத்திலிருந்து.

பைக் அருகே சென்றேன்! சென்றவன் அப்படியே நின்றேன்!
காரணம் என் பைக் மீது ஒரு பட்டாம்பூச்சி!



'அவர்' தீவிர யோசனையில் இருந்தார் !
தியானமா? நித்திரையா? புரியவில்லை எனக்கு !
சோகமா? சிந்தனையா? தெரியவில்லை எனக்கு !

கண்டிப்பாக 'அவரை' தொந்தரவு செய்யும் எண்ணம் இல்லை.

வீட்டுக்கு செல்ல வேண்டுமே என்றோர் எண்ணம். பட்டாம்பூச்சி பறந்து விடுமே என்ற கவலை மறுபுறம். இப்படி ஒரு சந்தர்ப்பம் இனி ஒரு முறை கிடைக்குமா? தெரியவில்லை. சட்டென்று ஒரு சிந்தனை. புதிய கைப்பேசியில் (cellphone) ஒளிப்பதிவு கருவி (camera) இருப்பது நினைவுக்கு வர, உடனே 'க்ளிக்' செய்தேன் இந்த தருணத்தை.

என்னை கடந்து சென்ற சக தொழிலாளி என்னை ஒரு முறை(த்து) பார்த்து விட்டு சென்றான். நான் கண்டுகொள்ளவில்லை. ஐந்தாறு snaps எடுத்து கொண்டேன்.

'அவர்' இன்னும் அசையாமல் இருக்க, அரை மனதோடு, மிக லேசாக இருக்கையைத் தட்டினேன். முதலில் சிலிர்த்து, பின்பு படபடவென சிறகடித்து எங்கோ பறந்து சென்றது அந்த பட்டாம்பூச்சி. முகத்தில் சிறிய புன்னகை.

மனதுக்குள் ஏதோ ஒன்றை அடைந்த சந்தோஷம். நமக்கும் மேல் ஏதோ ஒரு சக்தி உள்ளதை உறுதி செய்ய, எப்படியோ வந்து, மிக அருகில், தரிசனம் தந்து, எங்கோ சென்ற அந்த பட்டாம்பூச்சியை நினைத்தபடி,வண்டியைத் தட்டினேன் வீடு நோக்கி.

Tuesday, July 04, 2006

அதிசயம் !


மிகச் சமீபத்தில் எனக்கு கிடைத்த Surprise GIFT இந்த Snap !

ஒவ்வொரு முறை இந்த புகைப்படத்தை பார்க்கும் பொழுதும் மனம் உடனே லேசாகிறது !

என்னையும் அறியாமல் ஒரு புன்னகை என் இதழோரம் எட்டி பார்க்கிறது !


உடனே கைகளில் அள்ளிக் கொள்ள மனம் ஏங்குகிறது !
மனதில் இருந்த கவலை பந்துகள் சச்சினைக் கண்டது போல் ஓடி ஒளிந்தன !

வாழ்க்கையின் ரசனை மேலும் புரிந்தது !

ஜில்லென்று ஒரு புன்சிரிப்பு !
முகமெங்கும் ஒரு பூரிப்பு !

சொல்ல இயலா மகிழ்ச்சி !
நெஞ்சில் ஒரு நெகிழ்ச்சி !

இது கவிதை இல்லை !

ஒரு கவிதையைப் பற்றி கவிதை எழுத எனக்கு தெரியாதே !

இந்த குட்டி தேவதையின் பெயர் - Riddhi !

நன்றி - Anitha ! உங்களுக்காக சட்டென்று தோன்றிய ஒரு குறள் !

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகளை

blogspotல் கண்ட தாய்.

Wednesday, June 28, 2006

என்ன செய்ய போகிறாய் ?

சாலையில் செல்லும் பொழுது சட்டென்று ஒரு மழைத்துளி இமை மீது விழுந்தால், சில்லென்று ஒரு சிலிர்ப்பு தோன்றுமே !
அப்படி தோன்றிய சிந்தனைச் சிதறல்களை பதித்து வைக்கும் இடம் இது!

முதல் முயற்சி !

அம்மா !
எந்த குழந்தையும் பேசும் முதல் வார்த்தை இது.
அடியேனின் முதல் தமிழ்-மொழி இணையப் பயன்பாட்டை இந்த வார்த்தைக் கொண்டு தொடங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சி !
முதல் அடியை மெதுவாக எடுத்து வைத்துள்ளேன் !

எல்லாம் இன்ப மயமாகட்டும் !