மழைத்துளி

சாலையில் செல்லும் பொழுது சட்டென்று ஒரு மழைத்துளி இமை மீது விழுந்தால், சில்லென்று ஒரு சிலிர்ப்பு தோன்றுமே! அப்படி தோன்றிய சிந்தனைச் சிதறல்களை பதித்து வைக்கும் இடம் இது!

Sunday, July 23, 2006

என்ன தவம் செஞ்சுபுட்டோம்?

அப்பர், திருநாவுக்கரசர், வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சி., பாரதியார், கர்ணன், வீரபாகு, சிவபெருமான், இராஜராஜ சோழன் ...
இன்னும் சொல்லி கொண்டே போகலாம்.
கண்டிப்பாக நம்மில் ஒருவர் கூட இவர்களை நேரில் பார்த்ததில்லை.

ஆனால் மேலே உள்ள ஒருவராவது நம் மனதில் ஒரு பெயரை கொண்டு வந்திருப்பார்கள்.
சி-வா-ஜி.
செவாலியே, நடிகர் திலகம், சிம்மக்குரலோன், நடிப்பு பல்கலைகழகம்....இன்னும் பல பெயர்.

கண்டிப்பாக பல சரித்திர நிகழ்வுகளை நாம் 'பார்த்து' தெரிந்து கொள்ள, பல விடுதலைப்போராட்ட வீரர்களின் இன்னல்களை அறிந்து கொள்ள, பல மாமேதைகளின் வாழ்வை புரிந்து கொள்ள உதவியது நடிகர் திலகத்தின் நடிப்பு தான்.

அவருடைய ஆரம்ப கால படங்கள் நமக்கு ஊட்டிய தமிழ் அறிவு மிக அதிகம்.

இவருக்கு அண்மையில் சிலை திறந்து பெருமை தேடி கொண்டார் தமிழக முதல்வர், கலைஞர்.
இருவரின் கலையுலக முன்னேற்றமும் மற்றவரால் மேலும் மகுடம் சூடிக்கொண்டது.

இந்த சிலைத்திறப்பு சில தடங்கலுக்கு பின்பே நடந்தது.
நம்மை விட தமிழார்வம் கொண்ட சில 'நல்லவர்கள்' என்ன செய்து விட்டார் இந்த சிவாஜி தமிழுக்கு என்று கேள்வி கேட்டு, சிலைக்கு தடை விதிக்க முயற்சி செய்து, மீசை மீது மண் ஒட்டி கொண்டனர்.

இறுதிவரை துணை நின்று, இந்த சரித்திர நிகழ்வை நடத்தி நட்புக்கு மேலும் ஓர் அளவுகோல் வைத்த கலைஞருக்கும், நடிப்பால் நடிப்பிற்கே பெருமை சேர்த்த சிவாஜிக்கும் ஒரு பெரிய salute.

இருவரை பற்றியும் பெருமை பேசமளவுக்கு இன்னும் எனக்கு அருகதை வரவில்லை.
தகுதியும் இல்லை. வந்தவுடன் கண்டிப்பாக இதே தளத்தில் வந்து எனது எண்ணங்களைப் பதிகிறேன்.

பின்னே இங்கே என்ன செய்கிறாய் ? என்று 'அன்பாக' கேட்பது புரிகிறது.
இவர்கள் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்கின்றோமே என்ற ஒரு சிறு 'தமிழ் கர்வம்' மற்றும் ஒரு சின்ன 'feelings-of-தமிழ்நாடு' இரண்டும் தான் காரணம்.

என்ன தவம் செஞ்சுபுட்டோம்?

2 Comments:

  • At 02 September, 2006 06:19, Anonymous Anonymous said…

    hello sir...

    ellam sari.. antha veerabhag.. yaaru.. i know from that shivaji movie only i came to know he is chronicle humanbeing..mm.. but one thing just because shivaji acted in that character people sidlined the Mr.Muruga son of Lord shiva and portrayed veerbagu is a Macho man. ellam screen play thaan.

    :)

     
  • At 09 February, 2007 01:21, Blogger ஜோ/Joe said…

    நடிகர் திலகம் பற்றி அருமையாக சொன்னீர்கள்!

    இங்கிவனை யாம் பெறவே
    என்ன தவம் செய்து விட்டோம்!

     

Post a Comment

<< Home