மழைத்துளி

சாலையில் செல்லும் பொழுது சட்டென்று ஒரு மழைத்துளி இமை மீது விழுந்தால், சில்லென்று ஒரு சிலிர்ப்பு தோன்றுமே! அப்படி தோன்றிய சிந்தனைச் சிதறல்களை பதித்து வைக்கும் இடம் இது!

Sunday, July 23, 2006

என்ன தவம் செஞ்சுபுட்டோம்?

அப்பர், திருநாவுக்கரசர், வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சி., பாரதியார், கர்ணன், வீரபாகு, சிவபெருமான், இராஜராஜ சோழன் ...
இன்னும் சொல்லி கொண்டே போகலாம்.
கண்டிப்பாக நம்மில் ஒருவர் கூட இவர்களை நேரில் பார்த்ததில்லை.

ஆனால் மேலே உள்ள ஒருவராவது நம் மனதில் ஒரு பெயரை கொண்டு வந்திருப்பார்கள்.
சி-வா-ஜி.
செவாலியே, நடிகர் திலகம், சிம்மக்குரலோன், நடிப்பு பல்கலைகழகம்....இன்னும் பல பெயர்.

கண்டிப்பாக பல சரித்திர நிகழ்வுகளை நாம் 'பார்த்து' தெரிந்து கொள்ள, பல விடுதலைப்போராட்ட வீரர்களின் இன்னல்களை அறிந்து கொள்ள, பல மாமேதைகளின் வாழ்வை புரிந்து கொள்ள உதவியது நடிகர் திலகத்தின் நடிப்பு தான்.

அவருடைய ஆரம்ப கால படங்கள் நமக்கு ஊட்டிய தமிழ் அறிவு மிக அதிகம்.

இவருக்கு அண்மையில் சிலை திறந்து பெருமை தேடி கொண்டார் தமிழக முதல்வர், கலைஞர்.
இருவரின் கலையுலக முன்னேற்றமும் மற்றவரால் மேலும் மகுடம் சூடிக்கொண்டது.

இந்த சிலைத்திறப்பு சில தடங்கலுக்கு பின்பே நடந்தது.
நம்மை விட தமிழார்வம் கொண்ட சில 'நல்லவர்கள்' என்ன செய்து விட்டார் இந்த சிவாஜி தமிழுக்கு என்று கேள்வி கேட்டு, சிலைக்கு தடை விதிக்க முயற்சி செய்து, மீசை மீது மண் ஒட்டி கொண்டனர்.

இறுதிவரை துணை நின்று, இந்த சரித்திர நிகழ்வை நடத்தி நட்புக்கு மேலும் ஓர் அளவுகோல் வைத்த கலைஞருக்கும், நடிப்பால் நடிப்பிற்கே பெருமை சேர்த்த சிவாஜிக்கும் ஒரு பெரிய salute.

இருவரை பற்றியும் பெருமை பேசமளவுக்கு இன்னும் எனக்கு அருகதை வரவில்லை.
தகுதியும் இல்லை. வந்தவுடன் கண்டிப்பாக இதே தளத்தில் வந்து எனது எண்ணங்களைப் பதிகிறேன்.

பின்னே இங்கே என்ன செய்கிறாய் ? என்று 'அன்பாக' கேட்பது புரிகிறது.
இவர்கள் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்கின்றோமே என்ற ஒரு சிறு 'தமிழ் கர்வம்' மற்றும் ஒரு சின்ன 'feelings-of-தமிழ்நாடு' இரண்டும் தான் காரணம்.

என்ன தவம் செஞ்சுபுட்டோம்?

சரியா? தவறா?

என்னடா நாம கூட ஏதோ தமிழ்ல ஆர்வமா கிறுக்க ஆரம்பிச்சிட்டோமே !
பிரச்சனை இல்லாம ஓடிட்டு இருக்கேனு பார்த்தேன்.
வந்துச்சு ஆப்பு !

சமீபத்தில் மும்பையில் நடந்த அக்கிரமத்திற்கு பிறகு ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிகமாக blogs தடை செய்யப்பட்டன (இங்கே படிங்க).
சரி நம்ம ராசி எல்லோருக்கும் சேர்த்து work-out ஆகுது போல, மத்த வேலையப் பாக்கலாம்னு போனா, உள்ளுக்குள்ளே தமிழார்வம் ஊற்றெடுத்து ஓடிட்டே இருந்திச்சு !

ஒரு வழியா தடை நீங்க, இதோ மீண்டு(ம்) வந்தேன் அடியேன்.

இந்த தடை கண்டிப்பாக நம்மை சற்றே அழுந்த சிந்திக்க வைத்துள்ளது !
மனிதனின் ஒவ்வொரு முன்னேற்றமும், கண்டுபிடிப்பும் முதலில் நன்மையை விட தீமையையே அதிகம் தந்துள்ளது !

இந்த தொழில் நுட்ப யுகத்தில், இணையமும் அதன் பன்முக (multi-faceted) பயன்பாடுகளும் தீய சக்திகளால் மிகவும் தெளிவாக உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆனால் இதைத் தடுக்க தீர்வு இது போன்ற தடைகள் அல்ல !
தனிமனித ஒழுக்கம் மிக முக்கியம்.

இதை இதற்கு தான் பயன்படுத்த வேண்டும் என்ற இலக்கணம் கண்டிப்பாக இங்கே வேண்டும்.
ஏதோ ஒரு சிறிய, காழ்ப்புணர்ச்சி கொண்ட, சில முட்டாள்களால் இது போன்ற ஒரு நல்ல கருத்து-பரிமாறும் சாதனம் வீணாக போகக்கூடாது என்பதே என் (பிடி)வாதம்.

நம்மை விட வரப்போகும் சந்ததிகள் இந்த ஆக்க உணர்வோடு இருப்பது மனித குல மேம்பாட்டிற்கு மிகவும் அவசியம் !
அது மெய்ப்பட நாம் அனைவரும் நேரடியாகவோ மறைமுகமாகவோ கண்டிப்பாக போராட வேண்டும்.

இதற்கு கொடி பிடிக்க சொல்லவில்லை இந்த குமரன்.
நம்து வீட்டில், அக்கம் பக்கத்தில் உள்ள குழந்தைகளை இந்த தீய-வழி-இணைய-பயன்பாடு என்ற அரக்கனிடமிருந்து காத்தாலே போதும்!

இதை நாம் செய்வோமா ?
கண்டிப்பாக செய்வோம் !
ஏனென்றால் அந்த படிதத முட்டாள் மிருகங்களுக்கும், நமக்கும் வேறுபாடு உண்டன்றோ.

Tuesday, July 11, 2006

நெஞ்சு பொறுக்குதில்லையே !

மற்றுமொரு குண்டுவெடிப்பு ! (முழு விவரம் இங்கே)
மேலும் சில உயிரழப்பு !
நேற்று வரை நம்மிடையே இருந்த சில சகோதர சகோதரிகள் இன்று நம்மிடையே இல்லை.எவ்வளவு கனவுகளோடு உழைக்க சென்றவர்கள் வீடு திரும்பவில்லை.


ஏன் இப்படி ? இவ்வளவு உயிர்கள் குடித்து என்னங்கடா சாதிக்க போறீங்க?எதற்கும் உதவாத, ஒரு இத்து போன, கொள்(ல்)கைக்கா இவை எல்லாம்?
இது சுத்தப் பேடித்தனம். தைரியம் துளியும் இல்லா கோழைத்தனம்.

இனி என்ன?
ஆளுங்கட்சி இந்த பாதகர்கள் யார் என ஆராயும்.
எதிர்கட்சி போராட்டம் நடத்தி, ஆளுங்கட்சியைக் குறை சொல்லும்.
ஒரு நாள் strike செய்து மேலும் பொதுமக்களை இம்சித்து, அரசியல் நடக்கும்.
ஒரு commission அமைக்க பெற்று தீவிரவாதிகள் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஓர் அறிவிப்பு வரும்.
ஏதோ ஒரு Director இது பற்றி ஒரு திரைப்படம் எடுப்பார்.
Cnnibn, NDTV தொலைகாட்சிகள் 2-3 நாட்கள் இதைப் பற்றி coverage செய்வார்கள்.
பத்திரிகைகள் இதை தலைப்பு செய்தியாக போடுவார்கள்.
tea kadai bench ல் ஒரு Group Discussion நடைபெறும்.
சில software engineers coffee time போது இது பற்றி பேசுவோம்.
மேலும் சிலர் இதைப் பற்றி ஒரு blog ல் தட்டச்சு செய்வோம்.

வேறென்ன செய்ய முடியும் நம்மால்?

நெஞ்சு பொறுக்குதில்லையே ! கண்ணம்மா !
இந்த நிலைக்கெட்ட உலகத்தைக் காணும் போதிலே !
இது போன்ற தீவிரவாதம் வெடிக்கும் போதிலே !
சக மனிதன் துன்புற, அதைத் பார்த்து இயலாமையால் துடிக்கும்போதிலே !
நெஞ்சு பொறுக்குதில்லையே ! கண்ணம்மா !


பின்குறிப்பு:
அவசர சேவைக்கு தொலைபேசி எண்களை flash செய்து உதவிய cnnibn & ndtv, தம்முயிர் பற்றி கவலைப் படாமல், சகபயணிகளைக் காப்பாற்றியப் மற்ற பயணிகள், coverage செய்ய வந்து வேலையை மறந்து அடிப்பட்டோரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற reporters,
அங்கே அபாயம் இருந்தும் உதவிய மனிதர்கள்,
இவர்கள் சொன்னார்கள். மனிதநேயம் இன்னும் இருக்கிறதடா என்று.


Thursday, July 06, 2006

பைக் மீது ஒரு பட்டாம்பூச்சி !

நாம் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் சட்டென்று நடக்கும் சில நிகழ்ச்சிகள் நம் மனதில் நிறைந்து நீங்காமல் நிலைத்துவிடும் !

யோசித்து பார்த்தால், நாம் அந்த இடத்தில், அந்த நேரத்தில் மிகச் சரியாக இருந்தது ஒரு புதிராக, ஒரு புரியாத அதிசயமாகவே தோன்றும் !

அப்படித்தான் சில தினங்களுக்கு முன்பு ஒரு இனிய நிகழ்வு !
இன்ப அதிர்ச்சி ! Sweet Surprise !

வழக்கம் போல், வேலை முடித்து, சிறிது களைப்போடு, parkingல் இருந்த எனது பைக் தேடி சென்றேன் !

காதில் வழக்கம் போல் காதொலிப்பான் (earphone) ஊஞ்சலாட, அதில் 'மின்சாரம் என் மீது பாய்கிறதே' பாய்ந்து கொண்டிருந்தது Run திரைப்படத்திலிருந்து.

பைக் அருகே சென்றேன்! சென்றவன் அப்படியே நின்றேன்!
காரணம் என் பைக் மீது ஒரு பட்டாம்பூச்சி!



'அவர்' தீவிர யோசனையில் இருந்தார் !
தியானமா? நித்திரையா? புரியவில்லை எனக்கு !
சோகமா? சிந்தனையா? தெரியவில்லை எனக்கு !

கண்டிப்பாக 'அவரை' தொந்தரவு செய்யும் எண்ணம் இல்லை.

வீட்டுக்கு செல்ல வேண்டுமே என்றோர் எண்ணம். பட்டாம்பூச்சி பறந்து விடுமே என்ற கவலை மறுபுறம். இப்படி ஒரு சந்தர்ப்பம் இனி ஒரு முறை கிடைக்குமா? தெரியவில்லை. சட்டென்று ஒரு சிந்தனை. புதிய கைப்பேசியில் (cellphone) ஒளிப்பதிவு கருவி (camera) இருப்பது நினைவுக்கு வர, உடனே 'க்ளிக்' செய்தேன் இந்த தருணத்தை.

என்னை கடந்து சென்ற சக தொழிலாளி என்னை ஒரு முறை(த்து) பார்த்து விட்டு சென்றான். நான் கண்டுகொள்ளவில்லை. ஐந்தாறு snaps எடுத்து கொண்டேன்.

'அவர்' இன்னும் அசையாமல் இருக்க, அரை மனதோடு, மிக லேசாக இருக்கையைத் தட்டினேன். முதலில் சிலிர்த்து, பின்பு படபடவென சிறகடித்து எங்கோ பறந்து சென்றது அந்த பட்டாம்பூச்சி. முகத்தில் சிறிய புன்னகை.

மனதுக்குள் ஏதோ ஒன்றை அடைந்த சந்தோஷம். நமக்கும் மேல் ஏதோ ஒரு சக்தி உள்ளதை உறுதி செய்ய, எப்படியோ வந்து, மிக அருகில், தரிசனம் தந்து, எங்கோ சென்ற அந்த பட்டாம்பூச்சியை நினைத்தபடி,வண்டியைத் தட்டினேன் வீடு நோக்கி.

Tuesday, July 04, 2006

அதிசயம் !


மிகச் சமீபத்தில் எனக்கு கிடைத்த Surprise GIFT இந்த Snap !

ஒவ்வொரு முறை இந்த புகைப்படத்தை பார்க்கும் பொழுதும் மனம் உடனே லேசாகிறது !

என்னையும் அறியாமல் ஒரு புன்னகை என் இதழோரம் எட்டி பார்க்கிறது !


உடனே கைகளில் அள்ளிக் கொள்ள மனம் ஏங்குகிறது !
மனதில் இருந்த கவலை பந்துகள் சச்சினைக் கண்டது போல் ஓடி ஒளிந்தன !

வாழ்க்கையின் ரசனை மேலும் புரிந்தது !

ஜில்லென்று ஒரு புன்சிரிப்பு !
முகமெங்கும் ஒரு பூரிப்பு !

சொல்ல இயலா மகிழ்ச்சி !
நெஞ்சில் ஒரு நெகிழ்ச்சி !

இது கவிதை இல்லை !

ஒரு கவிதையைப் பற்றி கவிதை எழுத எனக்கு தெரியாதே !

இந்த குட்டி தேவதையின் பெயர் - Riddhi !

நன்றி - Anitha ! உங்களுக்காக சட்டென்று தோன்றிய ஒரு குறள் !

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகளை

blogspotல் கண்ட தாய்.